Thursday, August 23, 2012

யாழ்குடா நாட்டின் சுற்றுலாத்துறைதற்போதய நிலை

                                                            ஊடக துறையில் புரட்சியை ஏற்படுத்தும் இலங்கை இதழியல் கல்லூரி மாணவர்களான  நாம் குழு மற்றும் தனி செயற்திட்டம் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்  நோக்கி சென்று தகவல்களை திரட்ட  உள்ளோம். எமது குழுவிற்கு 'கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை' எனும் தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நான் 'யாழ்குடா நாட்டின் சுற்றுலாத்துறையின் தற்போதய நிலை ' தொடர்பில் ஆராய உள்ளேன்.
இது எனது யாழ் நோக்கிய முதலாவது பயணம் . இதுவரை யாழில் பாதம் பதிக்காத நான்  யாழின் சுற்றுலாத்துறை தொடர்பில்  தகவல்களை திரட்ட உள்ளேன் .இதில் தவறுகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது தோள் கொடுக்கும் தோழர்களாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்    கடும் வெயில் வறட்சி என  பாராது  யாழ் மண்ணில் எனது  நண்பர்களுடன் மும்மொழி ஒற்றுமையுடன்  சேர்ந்து தகவல்களை திரட்டவுள்ளோம். இச்செயல் திட்டத்துக்கான கல்வி சுற்றுலாவாக அமைந்தாலும் நண்பர்களுடன் சேர்ந்து  ஒரு வினோத பயணமாக அமையும்  என்ற எதிர்பார்போடு எங்களுடைய செயற்பாட்டை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் முடிப்போம் என்ற நம்பிக்கையுடன்  யாழ்  நோக்கிய எமது பயணத்துக்காக நாட்களை  எண்ணிக்கொண்டு இருக்கும்  நண்பர்கள் குழாமோடு நானும் இணைந்து பயணத்தினூடாக சேகரிக்கும்தகவல்களை உடனுக்குடன் தங்களுடன் இவ்வலைப்பின்னல் ஊடக பகிர்ந்துகொள்ள உள்ளேன். 

No comments:

Post a Comment