Friday, November 16, 2012

இந்துக்களின் கலாசாரத்தினை பிரதிபலித்த திருமண சடங்கு
முப்பது வருடகால யுத்தத்தின் பின்னரும் யாழ் மண்ணுக்கே உரித்தான கலை கலாச்சாரங்கள் இன்னும் புரையோடிப் போகாது மக்களுக்குள்ளே புதைந்து காணப்படுகின்றது என்பதினை எடுத்தியம்பும் முகமாக யாழ் மண்ணில்  இன்னும் இந்து சம்பிரதாய முறையிலான திருமண சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றது . யாழ் நோக்கிய எமது பயணத்தின் போது அவ்வாறன ஒரு திருமண வைபவத்தினை பார்க்க கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதே

பிக்குணி சங்கமித்தாவின் இலங்கை விஜயத்திற்கான முத்திரை  சின்னம் - யாழ் நாக விகாரை
யாழ் நகரின் ஸ்டேன்லி வீதியில் காணப்படுகின்றது யாழ் நாக விகாரை .யாழ் மண்ணில் பௌத்த மதத்தின் முக்கிய வணக்கஸ்தலமாக காணப்படும் இவ் யாழ் நாக விகாரை ,பிக்குணி சங்கமித்தா அனுராதபுர நகருக்கு விஜயம் மேற்கொண்ட வேளை அதன் நினைவாக யாழ் மண்ணில் கட்டப்பட்டது . இவ் விகாரை பௌத்த மதத்திற்கு உரித்தானதாக காணப்பட்டப் போதிலும் அனைத்து இன மக்களாலும் மத இன வேறுபாடின்றி வணங்கப் படும் புனித தளமாக காணப் படுகின்றது . பௌத்த மத கலாச்சாரத்தினை பிரதிபலிப்பதாக இவ் விகாரை  காணப்பட்ட போதிலும் இந்து  மத கலாசாரத்தையும்  பிரதிபலிப்பதாகவே காணப் படுகின்றது. யாழ் கலாச்சாரத்தின் இக்கால நிலைப் பாடு தொடர்பில் இவ்
விகாரையின் பிரதம பிக்கு தொம தொழுவோ சுமங்கல ஹிமியா கருத்து தெரிவித்தப் போது                      " இங்குள்ள மக்கள் வடுக்களை சுமந்த வாழ்வியலை மேட்கொன்டப் போதும் அவர் தம் கலாசாரத்தில் எவ்வித மாற்றமும் இன்றியே வாழ்வதாகவும் யாழ் மண்ணின் கலாசார நிலைமை மிக உயரிய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார் "யாழ் நாக விகாரையானது கலாசார சின்னமாக காணப்பட்ட போதிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் துறையினர் வருகை தரும் முக்கிய இடமாகவும் காணப் படுகின்றது

கவனிப்பார் அன்றி காணப்படும் யாழின் தொல்பொருள் சின்னங்கள் -யாழ் நூதனசாலை என்றப் பெயரில் காணப்படும் சிறிய குடில் .
யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் பிரதிபலிக்கும் பண்டைய தொல் பொருள் சின்னங்களை பேணி பாது காக்கும் இடமாக காணப்படுகின்றது  யாழ் நூதனசாலை . யாழ் நகரிலிருந்து பலாலி நோக்கி கிலோமீற்றர் தூரம் செல்லும் போது நாவலர் வீதியில் கிலோமீட்டர் தூரத்தில்  இடது புறத்தில் காணப் படுகின்றது இவ் நூதனசாலைஸ்ரீ ஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் வீட்டின் ஒரு பகுதி சுவருடன் காணப்படும் சிறிய குடிலே யாழ் நூதன சாலையாக காணப்படுகின்றது.தொல் பொருள் சின்னங்களை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினர் அது தொடர்பில் தெரிந்துக் கொள்வதற்க்கும் வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதட்குமே  ஆகும் . ஆனப் போதிலும் யாழ் மண்ணில் நூதன சாலை ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வியினை கேட்கும்  அளவிற்கு காணப்படுகின்றது யாழ் நூதன சாலை. எந்தவித உட்கட்டமைப்பு வசதிகளும் இன்றி அதிகால  சுவர்களுடனே இவ் யாழ் நூதன சாலை காணப் படுகின்றது .யாழ் மண்ணின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் முக்கிய ஆவணப் பொருள்கள் மட்டும் பழமை வாய்ந்த பொருட்கள் என்பன இவ் நூதன சாலையில் காணப் பட்டுகின்ரப் போதும் இவ் நூதன சாலை தொடர்பில் எந்த ஒரு அரச நிறுவனங்களோ அரச சார்பற்ற நிறுவனங்களோ எவ் வித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை  என்பது இவ் நூதனசாலையின் மேற்பார்வையாளரின்  கருத்து ஆகும்
இவ் யாழ் நூதன சாலையின் நிலைமை இவ்வாறே இன்னும் சிறிது காலத்துக்கு தொடருமானால் யாழின் தொல் பொருள் சின்னங்களுக்கு யாது நடக்கும் என்று தெரியாத நிலையிலேயே இவ் நூதனசாலை காணப்படுகின்றது .யாழின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பது  இலங்கை அரசின் கடமை மட்டும் அல்ல . யாழ் மக்களின் பொறுப்பும் ஆகும். இதேவேளை யாழ் மண்ணுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் கடமையும் கூடநூதன சாலை என்ற பெயரில் இயங்கும் இவ் சிறு குடில் இவர்களின் பார்வைக்கு எப்போது பட்டு சிறந்த கட்டிடத்துடன் கூடிய நூதன சாலையாக மாறும் என்பது........................????