Thursday, November 22, 2012
Thursday, November 15, 2012
நான்காம் நாள்
நான்காம் நாள் நாகவிகாரையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம். அங்கு சன நெரிசல்காரணமாக நாம் இடையிலேயே பயணத்தை திசை திருப்ப நேரிட்டது.
பிறகு சாட்டி கடலுக்கு எங்கள் குழுவினர் சென்றோம் .பிறகு கசுறின கடலில் நண்பர்களுடன் குதுகளித்தபின்பு .பகல் உணவை உண்டோம் .அழகிய மலை பொழுதில் எங்கள் குழுவினர் யாழ் கோட்டைக்கு சென்றோம் .யாழ் பொது சந்தைக்கு சென்று யாழ்ப்பாணத்திதற்கு உரித்தான பொருட்களை அங்கு பார்வையிட முடிந்ததது.அந்த மாலை பொழுதில் எங்களின் யாழ் பயணத்தை நிறைவு செய்து தலை நகரை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம்
Thursday, August 30, 2012
மூன்றாம் நாள்
மூன்றாம் நாள் நாம் முதலில் யாழ் பல்கலைக்கலகத்திற்கு சென்றோம் அங்கு
பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைகழகம் மூடப்பட்டிருந்தது இருந்தபோதிலும்
எங்களுக்கு பல்கலைகழகத்தை பார்வையிடும் சந்தர்பம் கிடைத்தது .அங்கு
எங்களுக்கு தேவையான புகைப்படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
பிறகு நல்லூரில் ஒரு திருமணத்திற்கு சென்றோம் அங்கு எங்களுக்கு புதிய வித்தியாசமான அழகிய திருமணத்தை பார்வையிடும் சந்த்தர்ப்பம்
எங்கள் குழுவிற்கு கிடைத்தது
அதன் பிறகு யாழ் நூதனசாலைக்கு சென்றோம் அங்கு எங்களால் நிறைய செய்தி சேகரிக்க முடிந்ததது
நாம் அதனை தொடர்ந்து செல்வசந்நிதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம் நாம் அப்
பயணத்தில் பறவைக்காவடி பார்வையிட முடிந்தது .செல்வசந்நிதி உத்சவ ஆரம்பநாள்
அன்று மிகுந்த சன நேரிசல் அங்கு காணப்பட்ட போதிலும் எங்கள் குழுவினால்
சிறந்த முறையில் செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டனர் ,இவ் கோயிலின்
வரலாற்றினை தொண்டமனாறு பொலிஸ் அதிபர் திரு .தங்கரராஜா அவர்கள் எங்களுக்கு
மிக சுவாரஷ்யமாக கூறினார்.
Wednesday, August 29, 2012
இரண்டாம் நாள்
நாம் எங்களுடைய குழு செயற்பாடு முதல் நாளை விட அதிகமான தகவல் பெற
வேண்டும் என்ற நோக்குடன் 4.30 மணியளவில் நித்திரையில் இருந்து எழுந்து நாம் காலை
உணவை நண்பர்களுடன் உற்கொண்ட பின்பு காலை 6.30மணியளவில் ஞானம்ஸ் விடுதியில்
இருந்து எங்கள் குழுவுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாம் நாள் தகவல்
திரட்.டலை ஆரம்பித்தோம் .அந்தவகையில் முதலாவதாக நல்லூர் கோவிலை நோக்கி
சென்றோம் .அங்கு சென்று நாம் நல்லுர்கந்தனின் அருளை பெற்றதுடன் முருகனின்
அபிஷேகத்தை பார்வையிடும் வாய்ப்பும் எம் குழுவிற்கு கிடைத்தது .அதனை
தொடர்ந்து நாம் கோவிலை சுற்றி பார்வையிட்டதுடன் கோவிலுக்கு வருகைதரும்
பக்தர்களிடம் கோவில் வரலாற்றை கேட்டப்போது எங்களுக்கு தெரிய வந்த விடயம்
இவ் கோவில் கட்டப்பட்டு 300ஆண்டுகள் என்பதனை எங்களுக்கு அறியமுடிந்தது
பிறகு எங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த சுற்றுலாபயணிகளை
எங்களுக்கு பார்வையிட கூடியதாக இருந்தது.அவர்களிடம் நாம் எங்களுடைய
நாட்டின் கலாச்சாரம் பற்றியும் யாழ் கலாச்சாரத்தை பற்றி கேட்டப்போது அவர்
கூறிய விடயம் யாழ் என்பது முற்றுமுழுதாக வேறுபட்ட கலாச்சாரத்தை கொண்டதாக
அவர்கள் கூறினார்கள் அத்தோடு முதல் முறையாக அவர்கள் இலங்கை வந்ததாகவும்
யாழ்ப்பாண கலாச்சாரம் அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறினார்கள்.
அதனை தொடர்ந்து நாம் யாழ் கச்சேரியை நோக்கி எங்களுடைய பயணத்தினை
ஆரம்பித்தோம் அங்கு நாம் விளையாட்டு மற்றும் கலாச்சாரப் பிரிவில் உள்ள
அதிகாரியான திருமதி.விஜயரட்ணம் அவர்களிடம் யாழ் கலாச்சாரத்தில் ஏதேனும்
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என எங்களுடைய கேள்வி அமைந்தது அதற்கு அவர்
சுற்றுலா பயணி வருவதால் முற்றுமுழுதாக யாழ் கலாச்சாரம் மாறுபடாவிடினும்
சற்று மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக அவர் குரிப்பிட்டார்.அவர் மேலதிகமாக
சுற்றுலாதுறை பற்றியும் எங்களுக்கு தகவல்களை வழங்கினார்.அதனை தொடர்ந்து
திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.மோகனேஷ்வரன் அவர்களை சந்தித்தோம்.
அடுத்து நாம் உடுவில் கிராமத்துக்கு சென்றோம் அங்கு தமிழ் பௌத்த சங்கத்தின்
செயலாளரை நாம் சந்தித்தோம் அவரிடமும் எங்களுக்கு அதிக தகவல் திரட்ட
கூடியதாக இருந்தது
மதிய உணவிற்காக யாழ் கலாச்சாரத்தின் படி மங்கோ உணவகத்தில் சுவையான உணவை உட்கொண்டோம் .
நாம் சுற்றுலதுரைக்காக தகவல் திரட்ட காசுரினா கடற்கரைக்கு பயணத்தை
மேற்கொண்டோம் எங்களுக்கு எதிர்பாராத விதமாக சடலம் ஒன்றினை சுடலைக்கு
எடுத்து செல்லும் காட்ச்சியை நாம் பார்வையிட்டோம் . பிறகு சுடலையில் இறுதி
கிரியை இடம் பெரும் வித்தியாசமான சடங்கு முறையும் எங்கள் குழுவிற்கு
பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது .பிறகு நாம் திட்டமிட்டப்படி காசுரினா
கடற்கரையை நோக்கி எங்கள் குழுவின் பயணம் தொடர்ந்தது அங்கு எங்கள் குழு
நண்பர்களுடன் சேர்ந்து தகவல் திரட்டியமை மாத்திரம் இன்றி சந்தோஷத்துடன்
விளையாடி மிகவும் சுவையான குளிர்களியை வாழ்வில் முதல் முறையாக சுவைக்கும்
வாய்ப்பும் கிடைத்தது.அன்றைய நாள் திட்டமிட்டபடி நிறைவு அடைந்த
சந்தோஷத்துடன் நாம் மணியளவில் ஞானம்ஸ் விடுதியை வந்தடைந்தோம்.
Tuesday, August 28, 2012
முதல் நாள்
முதல் நாள் இரவு10.15 மணியளவில் யாழ் ஞானம்ஸ் விடுதிக்கு வந்து சேர்த்தோம்.11.30மணியளவில் இரவு உணவை உட் கொண்ட பின்பு அடுத்த நாள் எங்களுடைய குழு செயல்பாடிட்காக திட்டங்களை மேற்கொண்டோம்.
முதல்நாள் இரவு திட்டமிட்டபடி காலை9.30 மணியளவில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ்ப்பாணம் பற்றிய ஒரு அறிமுக கலந்துரையாடல் படைத்தளபதி திரு. அதப்பத்து அவர்களால் நடாத்தப்பட்டது.இதன் முலம் எங்களுக்கு சுற்றுலாத்துறை பற்றிய அதிக தகவல் கிடைக்கபெற்றது.
அதை தொடர்ந்து நாக விகாரையை நோக்கி எங்களுடைய பயணம் தொடர்ந்தது,அங்கு விகாரையின் தலைமை பிக்குவை சந்தித்து அவரிடம் சுற்றுலாத்துறையால் யாழ் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக கலந்துரையாடினோம் அதன் மூலம் எங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான தகவல் கிடைத்தது.அவர் கூறிய முக்கியமான விடயம் என்னவென்றால் அவ் விகாரையில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் இந்து மாணவர்களுக்கு தமிழ் மொழி மூலம் பௌத்தம் சமயம் கற்பிக்கபடுவததகவும் இதற்கு மாணவர்கள் கல்வி கற்பதற்கு குறிப்பிட்டார்.எங்களை மிகவும் அன்போடு வரவேற்ற அவர்கள், எமது குழுவில் உள்ள சிலருக்கு பொன்னாடை போர்த்தி ஆசிர்வதித்தார் .இது எங்கள் குழுவிற்கு கிடைத்த ஆசிர்வாதமாக நாம் கருதினோம்.
பிறகு நாம் யாழ் அடைக்கலமாதா தேவாலயத்திற்கு சென்றோம்.அவ் தேவாலய போதகர் எங்களுக்கு அவ் பிரதேசத்தில் எவ்வளவு கிறிஸ்தவ மதத்தவர்கள் வசிக்கின்றனர் மற்றும் அடைக்கல மாதா தேவாலயத்தின் வரலாற்றையும் எங்களுக்கு கூறினார் .
முதல் நாளில் இறுதியாக நாம் யாழ் பொலீஸ் நிலையத்திக்கு சென்று யாழ் பொலீஸ் அதிபர் சமன் சிகர அவர்களிடம் யாழில் பாத்துகாப்பு தொடர்பாகவும் சுற்றுலா பயணிகளால் யாழில் எவ்வாரான பிரச்சினைகளை எதிர்நோக்க உள்ளது என்பது தொடர்பாக அவர் எங்களுக்கு முழுமையான தகவலை வழங்கினார்.
முதல் நாள் நாம் திட்டமிட்டப்படி எங்களுடைய கடமைகளை முடித்து நாம் இரவு 7.00 மணியளவில் ஞானம்ஸ் விடுதியை வந்தடைந்தோம்.
.
Thursday, August 23, 2012
சுற்றுலாத்துறையால் யாழ் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்
இலங்கை இதழியல் கல்லூரி மாணவர்கள் தங்களது குழு மற்றும் தனி செயற்திட்டம்
காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்று தகவல்களை திரட்டி
வழங்க உள்ளோம் ... எமது குழுவிற்கு 'கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை'
எனும்
தலைப்பு வழங்கப்பட்டுள்ளது... இதில் தனிநபர் செயத்திட்டத்துக்கான
தலைப்பாக 'சுற்றுலாத்துறையால் யாழ் கலாசாரத்தில்
ஏற்பட்ட மாற்றங்கள்' எனும் தலைப்பை நான் தெரிவு செய்துள்ளேன்.
யாழ்ப்பாணம் முற்று முழுதாக கலாசார பண்பாடுகளை கொண்டு விளங்கும் தமிழ்
மக்கள் வாழும் பிரதேசமாக
காணப்படுகின்றது. அவ்வாறான பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்
வருகையால் அம்
மக்களின் நடை, உடை, பாவனையில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கி உள்ளது,
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை எந்தளவுக்கு
அபிவிருத்தி அடைந்துள்ளது மற்றும் சுற்றுலாத் துறை அபிவிருத்தி காரணமாக
யாழ் கலாச்சாரம் எவ்வாறானதொரு மாற்றத்துக்கு முகம் கொடுத்துள்ளது
எனும் கருப்பொருளில் எனது தனிநபர் செயற்திட்டத்தை ஆராயவுள்ளேன். இதுவே
எனது யாழ் நோக்கிய முதல் பயணம்.....
"புதியதோர் மண்ணில்
பழகிய நண்பர்களுடன்
பாரம்பரியத்தை தேடி
எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன்"
பயணத்தை தொடரவுள்ளேன்.
பழகிய நண்பர்களுடன்
பாரம்பரியத்தை தேடி
எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன்"
பயணத்தை தொடரவுள்ளேன்.
இந்த செயற்றிட்டம் தொடர்பான தகவலை இவ்வளைப்பின்னல் ஊடக உடனுக்குடன் பார்வையிட முடியும்...
Subscribe to:
Posts (Atom)
