இலங்கை இதழியல் கல்லூரி மாணவர்கள் தங்களது குழு மற்றும் தனி செயற்திட்டம்
காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்று தகவல்களை திரட்டி
வழங்க உள்ளோம் ... எமது குழுவிற்கு 'கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை'
எனும்
தலைப்பு வழங்கப்பட்டுள்ளது... இதில் தனிநபர் செயத்திட்டத்துக்கான
தலைப்பாக 'சுற்றுலாத்துறையால் யாழ் கலாசாரத்தில்
ஏற்பட்ட மாற்றங்கள்' எனும் தலைப்பை நான் தெரிவு செய்துள்ளேன்.
யாழ்ப்பாணம் முற்று முழுதாக கலாசார பண்பாடுகளை கொண்டு விளங்கும் தமிழ்
மக்கள் வாழும் பிரதேசமாக
காணப்படுகின்றது. அவ்வாறான பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்
வருகையால் அம்
மக்களின் நடை, உடை, பாவனையில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கி உள்ளது,
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை எந்தளவுக்கு
அபிவிருத்தி அடைந்துள்ளது மற்றும் சுற்றுலாத் துறை அபிவிருத்தி காரணமாக
யாழ் கலாச்சாரம் எவ்வாறானதொரு மாற்றத்துக்கு முகம் கொடுத்துள்ளது
எனும் கருப்பொருளில் எனது தனிநபர் செயற்திட்டத்தை ஆராயவுள்ளேன். இதுவே
எனது யாழ் நோக்கிய முதல் பயணம்.....
"புதியதோர் மண்ணில்
பழகிய நண்பர்களுடன்
பாரம்பரியத்தை தேடி
எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன்"
பயணத்தை தொடரவுள்ளேன்.
பழகிய நண்பர்களுடன்
பாரம்பரியத்தை தேடி
எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன்"
பயணத்தை தொடரவுள்ளேன்.
இந்த செயற்றிட்டம் தொடர்பான தகவலை இவ்வளைப்பின்னல் ஊடக உடனுக்குடன் பார்வையிட முடியும்...
No comments:
Post a Comment