Wednesday, August 29, 2012

இரண்டாம் நாள்


நாம் எங்களுடைய குழு செயற்பாடு  முதல் நாளை விட அதிகமான தகவல் பெற வேண்டும் என்ற நோக்குடன் 4.30 மணியளவில் நித்திரையில் இருந்து எழுந்து நாம் காலை உணவை நண்பர்களுடன் உற்கொண்ட பின்பு காலை 6.30மணியளவில் ஞானம்ஸ் விடுதியில் இருந்து எங்கள் குழுவுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாம் நாள் தகவல் திரட்.டலை ஆரம்பித்தோம் .அந்தவகையில் முதலாவதாக நல்லூர் கோவிலை நோக்கி சென்றோம் .அங்கு சென்று நாம் நல்லுர்கந்தனின் அருளை பெற்றதுடன் முருகனின் அபிஷேகத்தை பார்வையிடும் வாய்ப்பும் எம் குழுவிற்கு கிடைத்தது .அதனை தொடர்ந்து நாம் கோவிலை சுற்றி பார்வையிட்டதுடன் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களிடம் கோவில் வரலாற்றை கேட்டப்போது எங்களுக்கு தெரிய வந்த விடயம் இவ் கோவில் கட்டப்பட்டு 300ஆண்டுகள் என்பதனை எங்களுக்கு அறியமுடிந்தது



பிறகு எங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த சுற்றுலாபயணிகளை  எங்களுக்கு பார்வையிட கூடியதாக இருந்தது.அவர்களிடம் நாம் எங்களுடைய நாட்டின் கலாச்சாரம் பற்றியும் யாழ் கலாச்சாரத்தை பற்றி கேட்டப்போது அவர் கூறிய விடயம் யாழ் என்பது முற்றுமுழுதாக வேறுபட்ட கலாச்சாரத்தை கொண்டதாக அவர்கள் கூறினார்கள் அத்தோடு முதல் முறையாக அவர்கள் இலங்கை வந்ததாகவும் யாழ்ப்பாண கலாச்சாரம் அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறினார்கள்.
அதனை தொடர்ந்து நாம் யாழ் கச்சேரியை நோக்கி எங்களுடைய பயணத்தினை ஆரம்பித்தோம் அங்கு நாம் விளையாட்டு மற்றும் கலாச்சாரப் பிரிவில் உள்ள அதிகாரியான திருமதி.விஜயரட்ணம்  அவர்களிடம் யாழ் கலாச்சாரத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என எங்களுடைய கேள்வி அமைந்தது  அதற்கு அவர் சுற்றுலா பயணி வருவதால் முற்றுமுழுதாக யாழ் கலாச்சாரம் மாறுபடாவிடினும்  சற்று மாற்றம்  ஏற்பட்டு உள்ளதாக அவர் குரிப்பிட்டார்.அவர் மேலதிகமாக சுற்றுலாதுறை பற்றியும் எங்களுக்கு தகவல்களை வழங்கினார்.அதனை தொடர்ந்து திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.மோகனேஷ்வரன் அவர்களை சந்தித்தோம்.
                அடுத்து நாம் உடுவில் கிராமத்துக்கு சென்றோம் அங்கு தமிழ் பௌத்த சங்கத்தின் செயலாளரை நாம் சந்தித்தோம் அவரிடமும் எங்களுக்கு அதிக  தகவல் திரட்ட கூடியதாக இருந்தது
மதிய உணவிற்காக யாழ் கலாச்சாரத்தின் படி மங்கோ உணவகத்தில் சுவையான உணவை உட்கொண்டோம் .
நாம் சுற்றுலதுரைக்காக தகவல் திரட்ட காசுரினா  கடற்கரைக்கு பயணத்தை மேற்கொண்டோம் எங்களுக்கு  எதிர்பாராத விதமாக சடலம்  ஒன்றினை சுடலைக்கு எடுத்து செல்லும் காட்ச்சியை நாம் பார்வையிட்டோம் . பிறகு சுடலையில் இறுதி கிரியை இடம் பெரும் வித்தியாசமான சடங்கு முறையும் எங்கள் குழுவிற்கு  பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது .பிறகு நாம் திட்டமிட்டப்படி காசுரினா கடற்கரையை நோக்கி எங்கள் குழுவின் பயணம் தொடர்ந்தது அங்கு எங்கள் குழு நண்பர்களுடன் சேர்ந்து தகவல் திரட்டியமை மாத்திரம் இன்றி சந்தோஷத்துடன் விளையாடி மிகவும் சுவையான குளிர்களியை வாழ்வில் முதல்  முறையாக சுவைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அன்றைய நாள் திட்டமிட்டபடி நிறைவு அடைந்த சந்தோஷத்துடன் நாம் மணியளவில் ஞானம்ஸ் விடுதியை வந்தடைந்தோம்.                                                                                                                                                                                                           

No comments:

Post a Comment