Tuesday, August 28, 2012

முதல் நாள்

முதல் நாள் இரவு10.15 மணியளவில் யாழ் ஞானம்ஸ் விடுதிக்கு வந்து சேர்த்தோம்.11.30மணியளவில் இரவு உணவை உட் கொண்ட பின்பு அடுத்த நாள் எங்களுடைய குழு செயல்பாடிட்காக  திட்டங்களை மேற்கொண்டோம்.
 முதல்நாள் இரவு திட்டமிட்டபடி காலை9.30  மணியளவில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ்ப்பாணம்  பற்றிய ஒரு அறிமுக கலந்துரையாடல் படைத்தளபதி திரு. அதப்பத்து அவர்களால் நடாத்தப்பட்டது.இதன் முலம் எங்களுக்கு சுற்றுலாத்துறை  பற்றிய அதிக  தகவல் கிடைக்கபெற்றது.
 அதை தொடர்ந்து  நாக விகாரையை நோக்கி எங்களுடைய பயணம் தொடர்ந்தது,அங்கு விகாரையின் தலைமை பிக்குவை சந்தித்து அவரிடம் சுற்றுலாத்துறையால் யாழ் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக கலந்துரையாடினோம்  அதன் மூலம் எங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான தகவல் கிடைத்தது.அவர் கூறிய முக்கியமான விடயம் என்னவென்றால் அவ் விகாரையில் ஒவ்வொரு  ஞாயிற்று கிழமைகளிலும் இந்து மாணவர்களுக்கு தமிழ் மொழி மூலம் பௌத்தம் சமயம் கற்பிக்கபடுவததகவும் இதற்கு மாணவர்கள் கல்வி கற்பதற்கு    குறிப்பிட்டார்.எங்களை மிகவும் அன்போடு வரவேற்ற அவர்கள், எமது  குழுவில் உள்ள சிலருக்கு  பொன்னாடை போர்த்தி ஆசிர்வதித்தார் .இது எங்கள் குழுவிற்கு கிடைத்த ஆசிர்வாதமாக நாம் கருதினோம்.

பிறகு நாம் யாழ் அடைக்கலமாதா  தேவாலயத்திற்கு  சென்றோம்.அவ் தேவாலய போதகர் எங்களுக்கு அவ் பிரதேசத்தில் எவ்வளவு கிறிஸ்தவ மதத்தவர்கள் வசிக்கின்றனர் மற்றும் அடைக்கல மாதா தேவாலயத்தின் வரலாற்றையும் எங்களுக்கு கூறினார் .


 முதல் நாளில் இறுதியாக நாம் யாழ் பொலீஸ் நிலையத்திக்கு சென்று யாழ் பொலீஸ் அதிபர் சமன் சிகர  அவர்களிடம்  யாழில் பாத்துகாப்பு தொடர்பாகவும் சுற்றுலா பயணிகளால் யாழில் எவ்வாரான பிரச்சினைகளை எதிர்நோக்க உள்ளது என்பது தொடர்பாக அவர் எங்களுக்கு முழுமையான தகவலை வழங்கினார்.
முதல் நாள் நாம் திட்டமிட்டப்படி எங்களுடைய கடமைகளை முடித்து நாம் இரவு 7.00 மணியளவில் ஞானம்ஸ் விடுதியை வந்தடைந்தோம்.
.                                                                                                                                                                                                          

No comments:

Post a Comment