Friday, November 16, 2012


யாழ் மண்ணின் சுற்றுலாத் துறை அபிவிருத்தியும் யாழ்     கலாசாரத்தின் நிலைப்பாடும்
ஈழத் திருநாட்டில் தமிழர் தம் கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் எடுத்தியம்புவதாய் மூவின மக்களின் ஒற்றுமையின் பிரதிபலிப்பாய் காணப்படும் யாழ் மண்ணில் மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதுடன் அத்தோடு சேர்த்து கலாச்சாரமும் தன;;;; உயரிய  இடத்திற்கு செல்கின்றது.
அந்த வகையில் யாழ் மண்ணின் கலாசாரத்தை எடுத்துக்காட்டுவதாக  யாழ் மண்ணின் அடையாள சின்னங்களாக காணப்படும் முக்கிய கட்டிடங்ககள் புனித வணக்கஸ்தலங்கள்  யாழ் மண்ணில் பிரசித்தி பெற்ற இடங்கள் மற்றும் யாழ் மக்கள் பின்பற்றும் வாழ்வியல் சம்பிரதாயங்கள் என்பன முக்கிய அம்சங்களாக காணப்படுகின்றது .
 அபிவிருத்தியை  நோக்கி பயணிக்கும் இலங்கை நாட்டின் ஏனைய பிரதேசங்களை போலவே மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் வட மாகாணமும் பல்வேறு அபிவிருத்தியை கண்டு வருகின்றது . அந்தவகையில் வீதி புனரமைப்பு , உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பனவற்றோடு நாட்டிற்கு அதிகளவு வருவாயை ஈட்டித் தரும் உல்லாசத் துறை அபிவிருத்தியும் சிறிது சிறிதாக ஏற்பட்டுவருகின்றது .
அந்தவகையில் யாழ் மண்ணின் கலாச்சார மற்றும் உல்லாசத் துறை அபிவிருத்தியினை நோக்கிய தேடலில் பல சுவாரஷ்யமான  பலர் அறிந்தும் அறியாத தகவல்களை பெறக் கூடியதாக இருந்தது .
அந்த வகையில் மக்களின் இருப்பின் பிரதிபலிப்பாய் காணப்படும் கலாச்சார நிகழ்வுகளும் பாரம்பரிய ;லை விழுமிய பிரதிபலிப்புகளும் உல்லாச துறையோடு சேர்த்து வளர்ச்சியினை கண்டு கண்டுவருகின்றது .

No comments:

Post a Comment