Friday, November 16, 2012


இந்துக்களின் பாரம்பரிய தத்துவத்தை பறைசாற்றும் நல்லூர் கந்த சுவாமி  கோவில் 
யாழ் மண்ணில் வரலாற்று சிறப்பு மிக்கதும் இந்துமக்கள் மட்டும் அன்றி அனைத்து இன மக்களாலும் வழிப்படப்படும் புனித தளமான நல்லூர்  கந்த சுவாமி கோவிலானது யாழ் மண்ணின் கலாச்சாரத்தை மட்டும் அன்றி அதிக உல்லாச பிரயாணிகள் வருகை தரும் உல்லாசத் துறை சார் இடமாகவும் காணப்படுகின்றது . யாழ் நகரிலிருந்து பருத்தி துறை நோக்கி கிலோமீட்டர் பயணிக்கும் போது யாழ் மண்ணின் சின்னமாய்  தலை தூக்கிய கோபுரத்துடன் நல்லூர் கந்தன் கோவில் காணப்படுகின்றது .யாழ்பாண வரலாற்றின் முக்கிய இடமாகவும் இவ் நல்லூர் காணப்படுகின்றமை முக்கிய அம்சமாகும் .அந்தவகையில் 12 ஆம் நூற்றாண்டு    தொடக்கம்17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் யாழ்பாணத்தின் தலை நகரமாகவும் நல்லூர் காணப்பட்டது .யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது

No comments:

Post a Comment