Friday, November 16, 2012


கதிர்காம தீர்தோட்சவத்தின் பின் பயத்தம் துவையலுடன் இளநீர் படைத்து வரவேற்கப்படும் யாழ் செல்வ சந்நிதியான்
இலங்கை திருநாட்டில் காணப்படும் சிறப்பு மிக்க முருக  வழிப்பாட்டு தலங்களுள் யாழ் செல்வ சந்நிதி திருத்தலமும் ஒன்றாகும் . யாழ் மாவட்டத்தின் வடமராச்சி பகுதியில் சரித்திர வளமிக்க தொண்டைமானாறு என்னும் வளமிக்க கிராமத்தில் செல்வ சந்நிதி திருத்தலம் அமைந்துள்ளது .புராண கதைகளுடன் தொடர்புபட்ட இவ் செல்வ சந்நிதி ஆலயமானது கந்த புராணத்திலும் இடம்பெற்றிருப்பது முக்கிய விடயமாகும் .இவ் ஆலயத்தின் முக்கிய சிறப்பம்சம் கதிர்காம கந்தன் கொடியேற்றத்தின் போது பெருமானை  உளுத்தம் பிட்டு நிவேதித்து அனுப்புவதும் பின்னர் கதிர்காம தீர்தோட்சவத்தின் பின்னர் பயத்தம் துவையலும் இளநீரும் படைத்து வரவேற்பதும் தொன்று தொட்டு இன்று வரை நடைபெறும் முக்கிய அம்சமாக காணப் படுகின்றது .ஆவணி மாத பூரணையில் தீர்த்த வைபவமும் அதற்கு முன் உண்டான அமாவாசை நீங்கி பிரதமை கூடும் வேளை கொடியேற்ற உற்சவமும்  ஐந்தாம் நாள் பகல் உற்சவத்துடன் ஆரம்பமாகி சுமார் பதினைந்து நாட்கள் திருவிழா இடம்பெறும் .யாழ் மண்ணில் தமிழர் தம் கலாச்சாரத்துடன் இன்றைய நாலளவில் உல்லாச துறையினரின் வழிப்பாட்டு தளமாகவும் இவ் யாழ் செல்வ சந்நிதி காணப்படுகின்றது .வருடார்ந்த உட்சவகால நிகழ்வுகளில் போது பக்தர்கள்ள எடுக்கப்படும் தீச்சட்டி காவடிகள் மற்றும் தூக்கு காவடி என்பன அன்று தொடக்கம் இன்று வரை தமிழர் தம் கலாச்சாரமாக காணப்படுகின்ற போதிலும் சுற்றுலாத்துறையினர் மத்தியிலும் சிறந்த இடம் பிடித்திருப்பது முக்கிய விடயமாகும் .

No comments:

Post a Comment